https://sivanaadi.nowfloats.com
SIVANAADI SIVANAADI 56dfd5c79ec6680bf8e96eab False 3 1
OK
Preview

This is your website preview.

Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

91

Yeaganathar

background image

about

குருவே சரணம்! குருவடி சரணம்! சுமார் 4112 வது வருடங்களுக்கு முன் சைவ வேளாளர் குலத்தில் இன்றைய சின்னமனூர் (சங்க காலத்தில் திரு பூலாநந்திஸ்வரபுரம் ஆற்றங்கரை ஓரத்தில்) பிறந்தவர் ,பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் 2ம் சீடரின் கீழ் பயிற்சி பெற்ற 17 பேர் மானசரோவர் அனுப்பப்பட்டு ரிஷிகளின் வழிகளில் பயிற்சி பெற்று அதில் குருநாதர் மட்டும் சதுரகிரியில் யமவனம் என்ற பகுதியில் , மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார்.பின் நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாக கூறப்படும் ஒரு குகையில் இறுதி தவம் செய்துள்ளார். நாகமலையில் வடக்கு பகுதியில் காக ஊத்து என்ற இடத்தில் காயகல்ப மருந்து தயார் செய்து சாப்பிட்டுள்ளார். அதனால் ஏற்படும் காயசித்தி பல யுகங்களுக்கு நிலைத்து நிற்பதற்காக போகர் ஆசிரமத்தில் கற்ற வித்தையிலிருந்து நவபாஷாணத்திலிருந்து 9 வகையாக செம்புகளை பிரித்து அவுரி சாறில் கரைக்கப்பட்ட ஊசிகாந்தம், இந்திரகோபம் போன்ற 16 பொருள்களை சேர்த்து ஒரு கிண்ணி (bowl) செய்துள்ளார் . அவ்வாறு செய்த கிண்ணியை பசுமாட்டின் பால்மடிக்கு கீழ் வைத்தால் தானாக பால் கறக்கும் , பின் அது மருந்தாக மாறும்.இதை ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டபின் நாகமலை உச்சியிலிருந்து தான் நிருவிகற்ப ஜீவசமாதி அடையக்கூடிய இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அக்கிண்ணியை வான்வெளியில் அனுப்பியுள்ளார். அது புவிக்காந்த விசை அதிகமாக இருக்குமிடத்தில் மேலே ஏறும் , குறையும் இடத்தில் கீழிறங்கும். இவ்வாறு மேலும் கீழும் மிதந்து வந்து அம்மலையில் தென்மேற்கு திசையில் சுமார் 10 Km தொலைவில் உள்ள கானக பகுதியில் இறங்கியுள்ளது. அக்கிண்ணியை தொடர்ந்து வந்த குருநாதரின் 16 சீடர்கள் கிண்ணி இறங்கி வந்த இடத்தைப் பார்த்த போது அது ஒரு கற்பூர வில்வ மரத்தடியில் செந்ராஜ நாக புற்றின் மீது இறங்கி இருப்பதை கண்டு அதை தனது குருநாதரிடம் தெரிவித்த போது அவர் அவ்விடத்திற்கு வந்து பாம்பாட்டி சித்தரின் பீஜ மந்திரங்களை கொண்டு அதில் வசித்த செந்நாகத்திற்கு முக்தி தந்து அந்த புற்றின் மீது தனது ஜீவ சமாதி பீடத்தை அமைக்குமாறு கேட்டு கொண்டதன்படி பழனி மலையிலிருந்து சித்த குழுக்கள் அவ்விடத்திற்கு வந்து அக்கானக பகுதியை சீர்படுத்தி நிருவிகல்ப சமாதிக்கான பூஜைகளை செய்தபோது குருநாதரின் குருநாதன் பழனியிலிருந்து அவ்விடத்திற்கு வந்து தனது சீடருக்கான அனைத்து பூஜைகளையும் தானே செய்த போது நிருவிகல்ப சமாதிக்குரிய அக்கினியாக தானே சூரிய சந்திர நாள் உள்ளவரை தனது சீடருக்காக இருப்பேன் என உறுதி கூறி அவரது மூல வாசியை திறந்து வைத்தார். நிருவிகல்ப சமாதி அடையும் போது ஒரு ஆத்மா சிரஸிலிருந்து 12 வது அங்குலத்தில் இருக்க கூடிய ஏக பரபிரம்ம நிலையில் அடையும் 1008 இதழ்களை உடைய சக்கரத்தை அடையும் போது ஆண் பெண் பேதமற்ற ஏக நிலையடைந்து , இப்புவி உலகில் எவ்விதத்தில் கிடைக்கும் அனைத்து வித இன்பங்களை காட்டிலும் கோடி மடங்கு அதிகமாக கிடைக்கும் பேரின்ப நிலை அடையும்.அங்கே சதாசிவமும் ஆனந்த வல்லி தாயாரும் இணைந்த பின் மீண்டும் பிரியாத பிரியா ஆவுடை நிலை அடையும் போது, நிருவிகல்ப சமாதி ஆகி விடும். இதே போல் குருநாதன் கேசரி முத்திரை இட்டு, மூலவாசி திறக்கப்பட்டு நிருவிகல்ப நிலை அடையும் போது அவரது உடம்பிலிருந்து மிகப்பெரிய பேரொளி அவரை சுற்றி பரவியது. அவ்வொளி அங்கு சூழ்ந்திருந்த அடியார்களது உடம்பை கடந்து செல்லும் போது 10 இமை பொழுது நேரத்திற்கு குருநாதன் அடைந்த பேரின்ப ஆனந்தத்தை அனுபவித்தனர். இவ்வாறு ஏக பரபிரம்ம நிலையை அனைவரும் உணரும்படி குருநாதன் செய்ததால் அவருக்கு "ஏகநாதர்" என்ற சிறப்பு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதில் குருநாதரின் குரு அக்கினியாக திருநந்திக்கு கீழ் ஜீவசமாதி அடைந்துள்ளார். குருநாதரின் இரண்டு சீடர்களில் ஒருவரான மாணிக்கவாசக தம்பிரான் கன்னி மூலையில் விநாயகர் கீழ் ஜீவசமாதியாக உள்ளார். வாயு மூலையில் முருக பெருமானுக்கு கீழ் சபாபதி தம்பிரான் ஜீவசமாதியாக உள்ளார். இவ்வாறு திருநந்தி விநாயகர் முருகப்பெருமான் உள்ள இடங்களில் அ, உ ,இ என்ற முக்கோணத்தில் மூவர் ஜீவசமாதிகள் உள்ளன. இங்கு ஜீவசமாதிக்குரிய ஆனந்த வல்லி அம்மன் அர்த்த மண்டபத்தில் தெற்கு முகமாக அமைந்துள்ளார். அந்த மண்டபத்தின் கீழ் நவபாஷாண கிண்ணியும் , அக்கோயிலை சுற்றி 16 சீடர்களும் ஆனந்த வல்லி அம்பாளின் 16 கோணங்களில் அமைந்துள்ளனர். இங்கு மூன்றாவது சீடராக இருந்தவர் குருகுல மடத்தை உருவாக்கி திருமணம் செய்து தனது சுற்றத்தாருக்கான ஊரை உருவாக்கி "கிண்ணிமங்கலம்" என்றும், மடத்தினை "கிண்ணிமடம்" என்றும் வைத்து 117வது வயதில் சமாதி நிலையடைந்துள்ளார். அவரது வாரிசுகளின் வழிவந்த குருவழி தொண்டர் 34 வது தலைமுறையில் மு. அருளானந்தம் என்ற அடியாரின் மூலம் இச்செய்தி சேகரிக்கப்பட்டது. மடத்தின் பாடத்திட்டங்களாக இருந்த சுமார் 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் மாதத்தில் வரும் இரண்டு தசமி திதிகளில் இலவசமாக வெளிப்படையாக கற்றுத்தரப்படுகிறது. தங்களின் ஆன்மிக சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு +91-99445-64856 என்ற எண்ணில் IST இரவு 8 மணி முதல் 11 மணி வரை தொடர்பு கொள்ளலாம். e-mail: guruyeagan@gmail.com

Services

product image
Guru Nathar
view details
5c0a34c1b5ddb60001832d37

Latest Updates

Sidhar Vaithiyar Manadu in mad Sidhar Vaithiyar Manadu in mad
Sidhar Vaithiyar Manadu in madurai
Murugan +Valli+Thavanai Murugan +Valli+Thavanai
Murugan +Valli+Thavanai
Vinayagar Vinayagar
Vinayagar
See All Updates
91
false